மேலோட்டம்

காலி மாவட்டத்தின் கரந்தெனிய பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசம் கடலோர வலயத்துக்கு சிறிது அப்பால் சற்று சமவெளியான நிலப்பரப்பில் அமைந்துள்ளது

கிழக்கு நெட்டாங்கு 80-15 இலிருந்து 80-10 க்கும் வட அகலாங்கு 6-15 இலிருந்து 6-20 க்கும் இடையே அமைந்துள்ளது.

கரந்தெனிய பிரதேச சபை பிரதேசத்தின் எல்லைகளாக வடக்கே பெந்தர பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமும்,தென் கிழக்கே எல்பிட்டிய மற்றும் வெலிவிட்டிய திவிதுறை பிரதேச சபை அதிகாரத்தித்குட்பட்ட பிரதேசமும், தெற்கே அம்பலங்கொடை பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமும், மேற்கே பலபிட்டிய பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசமும் காணப்படுகின்றன

கரந்தெனிய பிரதேச சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசம் கரந்தெனிய தேர்தல் பிரிவுக்கு உரியதாகும். இதன் பரப்பளவு 8,423 ஹெக்டெயார் (84 சதுர கிலோமீட்டர்கள்) ஆகும்.இது 40 கிராம சேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. காலி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பின் 5% இப்பிரிவுக்கு உரியதாகும்.2021 குடித்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த ஜனத்தொகை 74606 ஆகும்.

பிரதான விவசாய நிலப் பயன்பாடு

வகைநிலப் பரப்பளவு ஹெக்டெயார்
கறுவா3912.2
நெல்2575
தேயிலை295.6
தென்னை348

 

கரந்தெனிய பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தின் இன ரீதியான மக்கள் தொகை

இனம்மக்கள் தொகைவீதம்
சிங்களம்7146398%
தமிழ்6060.83%
முஸ்லிம்8311.14%
பர்கர்40.0055%
ஏனையோர்20.0029%

இலக்கு

"வினைத்திறனான மற்றும் பயன்மிக்க சேவைகளினூடு தென்னிலங்கையின் சிறந்த நகரம்"

பணிகள்

"நிறுவனத்தில் தற்சமயம் காணப்படும் அனைத்து வளங்களையும் வினைத்திறனுடனும்,பயன் மிக்க முறையிலும் முகாமைத்துவம் செய்வதனூடு அபிவிருத்தியடைந்த வீதிகள்,சுகாதார சேவைகள் மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கான ஏனைய சேவைகளை வழங்குவதன் மூலம் மக்களின் நலனோம்பல் மற்றும் மனமகிழ்ச்சியை சிறப்பாக நிறைவடையச் செய்து பாதுகாப்பானதும்,எழில் மிக்கதுமான சூழலை நிர்மாணித்தல்."

பிரதான சேவைகள்

  • பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் மன மகிழ்ச்சிக்கும் அவசியமான சுகாதார நடவடிக்கைகள்,சூழல் சார்ந்த அடிப்படை தேவைகளுக்குரிய நடவடிக்கைகள் மற்றும் தகனச்சாலை செயல்பாடுகளை நடாத்திச் செல்லல்.
  • வீதி நிர்மாணம்,பராமரிப்பு,சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பு
  • தெரு விளக்குகள் பராமரிப்பு உட்பட்ட பொது மக்களுக்கு அவசியமான சேவைகளை நடாத்திச் செல்லல்.
  • பாலர் பாடசாலை,நூலகம் அடங்கலான நலன்புரி மற்றும் சமூக சேவைகளை நடாத்திச் செல்லலும் அவற்றை மேம்படுத்தலும்.

 

பொது சேவைகள்

  • பொதுச் சந்தை
  • நிலையங்கள்(மஹ ஏதண்ட,குருந்துகஹ,ஊரகஸ்மன்ஹந்தி)
  • பொது மயானங்கள்(கலுவேலகொட,சொஹன்ஹந்தி,கிரிமெட்டியாவ,சொஹொன் கந்தை,தியபிட்டகல்லன,பனாபிட்டி)
  • தகன சாலைகள் – வடக்கு மாகல
  • விளையாட்டு மைதானங்கள்
  • விளையாட்டு மண்டபங்கள்( யக்கடுவ,சமரவீர,பீ டி.ஏ.பர்ணாந்து,பெஹெபியகந்தை)
  • பொது கழிப்பிடங்கள்(ஊரகஸ்மன்ஹந்தி,மஹ ஏதண்ட)
  • பாலர் பாடசாலைகள் (சபைக்கு சொந்தமான)மஹ ஏதண்ட,நுகேதிபுகந்தை
  • பொது கிணறுகள்
  • தெருவிளக்குகள்
  • சன சமூக நிலையங்கள் (தேவத்த,கீகஸ்பிட்டிய,பெலிகஸ்வேல்லை,கொட்டவெல,கொரக்ககஹஹந்தி,மடக்கும்புர,மஹகொட,ஹலகஹவேல்லை,மண்டகந்த,யக்கட்டுவ,தங்கஹவில,அமரகீரகொரக்கக)
  • மதிப்பீட்டு வரி செலுத்தும் சொத்துக்களின் எண்ணிக்கை
  • காணி வரி செலுத்தும் சொத்துக்களின் எண்ணிக்கை
  • வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கடைகளில் எண்ணிக்கை
  • மீன் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை
  • அரச பாடசாலைகள்